ரோட்டரி ஃபோர்ட் & அறநிலையத்துறை இணைந்து நடத்திய பிரம்மாண்ட விழா
திருச்சி, நவம்பர் 2, 2025:
திருச்சிராப்பள்ளி நகரின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் ஒரு மகத்தான முயற்சியாக, ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி ஃபோர்ட் மற்றும் தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை ஆகியவை இணைந்து நடத்திய மரக்கன்று நடும் விழா நேற்று (2.11.2025) வெகு சிறப்பாக நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி, தாளக்குடி பகுதியில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு உத்தமர் கோவிலுக்குச் சொந்தமான 3 ஏக்கர் நிலப்பரப்பில், பசுமையைப் பெருக்கும் நோக்குடன் ஏராளமான மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த விழாவிற்கு திருச்சிராப்பள்ளி அறநிலையத்துறை இணை ஆணையர் திரு. S. ஞானசேகரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடும் பணியைத் தொடங்கி வைத்தார்.
விழாவில், திருச்சிராப்பள்ளி அறநிலையத்துறை உதவி ஆணையர் திரு. M. லெட்சுமணன், திருப்பட்டூர் நிர்வாக அதிகாரி திரு. ஜெய்கிஷன், மற்றும் அருள்மிகு உத்தமர் கோவில் நிர்வாக அதிகாரி திருமதி. S. புனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரோட்டரி கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி ஃபோர்ட் சார்பில், உதவி ஆளுநர் Rtn. V. கோவிந்தராஜ், தலைவர் Rtn. M. சுரேஷ்பாபு, செயலாளர் Rtn. S. கருணாகரன், திட்ட தலைவர் Rtn. PP. J. நியூமேன் மற்றும் ரோட்டரி டிரஸ்ட் தலைவர் Rtn. PP. Dr. V. அய்யப்பன் சங்கர் ஆகியோர் உட்பட முன்னாள் தலைவர்கள் (Rtn. PP. M. சிவகுமார், Rtn. PP. D.P. பாலாஜி), சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர்.
சுமார் 3 ஏக்கர் பரப்பளவிலான கோவில் நிலத்தில், சுற்றுச்சூழலுக்கு உகந்த பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு, இந்தச் சமூகப் பணியை ரோட்டரி சங்க உறுப்பினர்கள் வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் ரோட்டரி சங்கம் மற்றும் அறநிலையத்துறை இணைந்து மேற்கொண்ட இந்த முயற்சி, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments