திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 14.01.2026 அன்று சமத்துவ பொங்கல் திருவிழா நடைபெற உள்ளதனைத் தொடர்ந்து, அனைத்து வார்டுக்குழு அலுவலகங்களிலும் பொங்கல் வைத்துத் திருவிழா கொண்டாடப்பட உள்ளது.
இத்திருவிழாவில் பொதுமக்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்றுச் சமத்துவ பொங்கல் திருவிழாவைச் சிறப்பித்துத் தருமாறு ஆணையர் அவர்களால் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
சமத்துவ பொங்கல் திருவிழா நடைபெறும் இடங்கள் வார்டு எண்.5, வாசுதேவன் தெரு, திருவானைக்கோவில், வார்டு எண்.32, பொன்னையா மேல்நிலைப்பள்ளி மைதானம், இருதயபுரம்,
வார்டுக்குழு அலுவலகம் – 3, S.I.T கல்லூரி அருகில், வார்டு எண் 54, வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி, மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, வார்டு எண்.27, உழவர் சந்தை, தென்னூர் ஆகிய இடங்களில் விழா நடைபெறுகிறது என மனகராட்சி ஆணையர் லி. மதுபாலன், அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments