Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி, கேகே நகரில் மாலை நேர உழவர்சந்தை துவக்கம்

விவசாயிகள் மற்றும் நுகர்வோர் நேரடியாக பயன் பெறுவதற்காக, மறைந்த முதல்வர் கலைஞர் அவர்களால் துவங்கப்பட்ட பொன்னான திட்டமானது உழவர்சந்தை, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அண்ணாநகர், கே.கே.நகர், முசிறி, துறையூர், திருவெறும்பூர், இலால்குடி மற்றும் மணப்பாறை என மொத்தம் ஏழு உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இவை அனைத்தும் காலை 5மணி முதல் பிற்பகல் 1மணி வரை செயல்பட்டு வருகிறது.

இந்த சந்தைக்கு வரும் விவசாயிகள் சரக்கு கட்டணம் ஏதும் இன்றி உழவர் சந்தைக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகள் மூலம் தங்களது விளைநிலங்களில் இருந்து விளைபொருட்களை இடை தரகர்கள் இன்றி, சில்லரை விலையை விட 15% குறைவாகவும், மொத்த விலையை விட 20% அதிகமாகவும் விற்று பயனடைந்து வருகின்றனர்.

மாவட்டத்தில் ஒரு உழவர் சந்தை மாலை நேரத்தில் இயங்கும் என்ற மாண்புமிகுஉழவர்நலத்துறை அமைச்சர் அவர்களின் நிதிநிலை அறிவிப்பை தொடர்ந்து திருச்சிராப்பள்ளிமாவட்டத்தில் கேகே நகர் உழவர்சந்தையில் மாலை நேரத்திலும் மாலை 4மணி முதல் இரவு8மணி வரை 28.07.2022 முதல் செயல்படுகிறது.

28.07.2022 அன்று மாலை நேர உழவர்சந்தையை கே.கே.நகரில் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) திருச்சி அவர்கள் துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், விவசாய ஆர்வலர்குழு உறுப்பினர்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவன உறுப்பினர்கள், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொனண்டனர்.

மாலை சந்தையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளான பாரம்பரிய அரிசி வகைகள், மரசெக்கு எண்ணெய், சிறுதானிய பொருட்கள், பயறு வகை சுண்டல் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட காளான் பொருட்கள், நாட்டு கோழி முட்டை ஆகியவை தரமானதாகவும் விலை மலிவாகவும் கிடைக்கும். எனவே மாலை நேர உழவர் சந்தைக்கு அனைவரும் வருகை புரிந்து பயன்பெற துணை இயக்குநர்(வேளாண் வணிகம்)திருச்சி கேட்டுக்கொண்டார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *