திமுக அமைச்சராக இருந்த பொழுது செங்குட்டுவன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2003 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினரால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தற்பொழுது திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதி நீதிமன்றத்தில் நடந்தது.

இதற்கு முன்னதாக திருச்சியில் ஊழல் தடுப்பு நீதிமன்றம் மற்றும் சென்னையில் எம்எல்ஏக்கள் சம்பந்தப்பட்ட வழக்கு தொடர்பான நீதிமன்றத்திலும் நடந்து வந்தது. மீண்டும் அந்தந்த மாவட்டங்களுக்கு முதன்மை மாவட்ட நீதிமன்றத்திற்கு எம்.பி, எம்எல்ஏக்களுக்கான வழக்குகள் மாற்றப்பட்டது.
இவ்வழக்கில்  அமைச்சர் செங்குட்டுவன் அவரது மகன் பன்னீர்செல்வம் சக்திவேல் மகள் மீனாட்சி வள்ளி(தம்பி மகள்) மற்றும் மருமகன் ராஜலிங்கம் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. செங்குட்டுவன் மற்றும் ராஜலிங்கம் மரணமடைந்து விட்டனர். இந்நிலையில் முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி பாபு நான்கு பேருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும், 2000 ரூபாயும் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளார்.

இந்த வழக்கானது 1996 லிருந்து 2001 வரை செங்குட்டுவன் அமைச்சராக இருந்த பொழுது 81 லட்சத்து 42 ஆயிரத்து 977 ரூபாயும் 45 பைசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அப்பொழுது லஞ்ச ஒழிப்புத்துறையினரால் வழக்கு தொடரப்பட்டது. தற்பொழுது இந்த வழக்கில் அரசின் சிறப்பு வழக்கறிஞராக ஹேமந்த் வாதாடினார். மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளதால் நான்கு பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர்.




            
            
            
            
            
            
            
            
            
            


Comments