திருச்சி மாநகரத்தை மேம்படுத்த, திருச்சி மாநகராட்சி எடுக்கும் முயற்சிகள் மற்றும் அதன் செயல்பாடுகளின் கண்காட்சி, புதிதாக சீரமைக்கப்பட்ட மாநகராட்சி அலுவலக பூங்காவில், செப்டம்பர் 16,17, 18 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
இக்கண்காட்சியில் “சாலைகள் மக்களுக்காகவே” என்னும் தலைப்பில் மாநகராட்சியால் ஒருங்கிணைக்கப்பட்ட வடிவமைப்பு போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வரைபடங்கள் முக்கிய பங்கு வகிக்கும்.
நகரத்தில் உள்ள நீர்நிலைகளை சீரமைப்பதற்கான புதிய உத்திகள் மற்றும் வரைமுறைகள், வளர்ந்து வரும் நகரங்களுக்கு மிகவும் தேவையான பொழுதுபோக்கு மற்றும் இளைப்பாறுவதற்கான திறந்தவெளி பொது இடங்கள் திட்டமிடுதல் போன்ற முயற்சிகள் உதாரணங்களுடன் காட்சிப்படுத்தப்பட்டு, மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
“நமது நகரமே நமது அடையாளம்”. இம்முயற்சியில் தங்களது ஆதரவும் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது. வெள்ளி மாலை 06.30 மணிக்கு துவங்கும் இக்கண்காட்சிக்கு அனுமதி இலவசம். 
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments