திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாலாஜி நகர் பகுதியில் உள்ள கார் வாஷிங் கடையில் கத்தியைக் காட்டி பணம் பறித்ததோடு தொடர் மிரட்டலில் ஈடுபட்ட மூன்று பேரில் ஒருவனை திருவெறும்பூர் போலீசார் கைதுசெய்ததோடு மற்ற இருவரை தேடி வருகின்றனர்.

திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாலாஜி நகரின் கார்களை வாஷிங் செய்யும் கடை உள்ளது.இந்த கடையில் புதுக்கோட்டை கரம்பக்குடி, புதுபட்டியை சேர்ந்தவர் காளிமுத்து இவரது மகன் பிரகாஷ் (37) இவர் காட்டூர் பாலாஜி நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் கார் வாஷிங் கடையில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.

அதற்காக அந்த நிறுவனம் அவருக்கு அந்தப் பகுதியில் ஒரு ரூம் எடுத்துக் கொடுத்துள்ளது. இதில் தனது குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவருடன் காட்டூர் ஜோதிபுரத்தைச் சேர்ந்த லட்சுமணன், விளாங்குளத்தைச் சேர்ந்த முருகன், கந்தர்வ கோட்டையைச் சேர்ந்த முருகேசன் ஆகியோர் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மூன்று நபர்கள் வந்து அவர்களிடம் மாமுல் கேட்டதாகவும் அதற்கு கொடுக்க மறுத்ததாகவும் அப்போது அதில் ஒருவன் தான் துவாக்குடி அண்ணா வளைவு ஏரியாவில் பெரிய ரவுடி என்றும் தற்பொழுது இந்த பகுதியில் குடி வந்துள்ளதாகவும் தனது பெயரை கேட்டாலே பணத்தை கொடுத்துவிட்டு உயிருக்கு பயந்து எல்லோரும் ஓடி விடுவார்கள் என்றும் நீ என்னவென்றால் கொடுக்க மறுக்கிறாய் என கூறி கத்தியை பிரகாஷ் கழுத்தில் ஹரிஹரன் வைத்து ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இது சம்பந்தமாக பிரகாஷ் தனது முதலாளியிடம் கூறியுள்ளார் அதற்கு அவர் போலீசுக்கு போக வேண்டாம் என கூறியுள்ளார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் அதுபோல் கடையில் இருந்த பொழுது ஹரிஹரன் மற்றும் இரண்டு பேர் என  மொத்த மூன்று பேர் இருசக்கர வாகனத்தில் வந்து பிரகாசையும் கடையில் வேலை செய்பவர்களையும் மாமுல்  தரமாட்டீர்களா? என கூறி தகாத வார்த்தையால் பேசி கொலை மிரட்டல்விடுத்ததோடு அவர்களை வாலை கொண்டு தாக்க முற்பட்டுள்ளனர். இதில் கடையில் இருந்தவர்கள் தப்பி ஓடி உள்ளனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து கடைஉரிமையாளரிடம் தெரிவித்ததை தொடர்ந்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து புகார் கொடுக்கும்படி கடை உரிமையாளர் பிரகாசை அறிவுறுத்தியுள்ளார்.அதன் அடிப்படையில் பிரகாஷ் இச்சம்பவம் குறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

அதன் அடிப்படையில்துவாக்குடி அம்பேத்கர் தெருவை சேர்ந்த பாலு மகன் ஹரிஹரன் (21)தற்போது திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் பாலாஜி நகர் 5வது குறுக்கு தெருவில் வசித்து வருகிறான் அவனை திருவெறும்பூர் போலீசார் கைது செய்ததோடு தப்பி ஓடியஅவனது கூட்டாளிகளான திருவெறும்பூர் எழில் நகரை சேர்ந்த நரேஷ், துவாக்குடி மலையைச் சேர்ந்த சுமன் ஆகிய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF



            
            
            
            
            
            
            
            
            
            
Comments