Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

முகநூல் லோன் மோசடி – திருச்சி சைபர் கிரைம் போலீசார் திருப்பூரில் 3 பேரை கைது

திருச்சி மாவட்டம், லால்குடி, புறத்தாக்குடியை சேர்ந்த திரு. ஆரோக்கியசாமி 54/25 த.பெ வில்லியம் என்பவர் தான் முகநூலில் Capital Finance – Loan என்ற விளம்பரத்தை பார்த்து 9773541323 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது Document fees, Application fees என பல காரணங்களை கூறி பணம் கேட்டதை நம்பி மொத்தம் ரூ.1,00,000 – யை அனுப்பியுள்ளார். பின்னர் லோன் பணம் ரூ. 3 லட்சத்தை தராமலும், இவர் அனுப்பிய பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வந்துள்ளனர். இது தொடர்பாக எதிரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி கொடுத்த புகாரின் பேரில் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் குற்ற எண்.17/2025 U/s 318(4), 336(2), 336(3), 340(2) BNS & 66C, 66D, 84B IT ACT– ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு சம்மந்தமாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம், அவர்கள் மேற்படி குற்ற வழக்கின் எதிரிகளை பிடிக்கும் பொருட்டு சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.சுமதி என்பவர் தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து எதிரிகளை பிடிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் எதிரிகளை துப்பு வைத்து, அவர்கள் பயன்படுத்திய செல்போன் எண்களை ஆய்வு செய்தும், எதிரிகள் திருப்பூரில் இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் நேற்று (19.09.2025) இரவு தனிப்படையினர் அங்கு சென்று வழக்கின் எதிரிகள் 1. ஸ்ரீனிவாசன் 43/25, த.பெ சேகர் எண்.4-331C பாரதி நகர், பிச்சம்பாளையம் புதூர், திருப்பூர் 2. கவிதா 33/25, க.பெ கணபதி -do- 3. கணபதி 43/25 த.பெ ஜோதிராமன் -do- ஆகியோரை கைது செய்து திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து எதிரிகளிடம் வாக்குமூலம் பெற்று நீதிமன்ற காவலுக்கு அனுப்ப தயார் செய்து வருகின்றனர். மேலும் அவர்கள் மோசடிக்கு பயன்படுத்திய மொபைல்போன்கள் -10, லேப்டாப் -1, மோடம் -1, சிம் கார்டு –10 மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது சம்மந்த்மாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செ. செல்வநாகரத்தினம், இ.கா.ப., அவர்கள் இன்று (20.09.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வழக்கின் எதிரிகளையும் அவர்கள் மோசடிக்கு பயன்படுத்திய சாதனங்களை பார்வையிட்டும் சிறப்பாக பணியாற்றிய தனிப்படையினரை பாராட்டி வெகுமதி வழங்க பரிந்துரை செய்துள்ளார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *