மூலிகை வைத்தியம், அக்குபஞ்சர் என அதிகரிக்கும் போலி மருத்துவர்கள் - இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனர் எச்சரிக்கை!!
தமிழக அரசு நோயினை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் மூலம் மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் தமிழக அரசால் நிறுவப்பட்ட தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம் மற்றும் இந்திய மருத்துவ பதிவு செய்து சான்றிதழ் பெற்றுள்ள சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் யோகா இயற்கை மருத்துவம் சிகிச்சை அளிக்க அரசால் அறிவிக்கப்பட்டனர்.
மேலும் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற விரும்பும் பொதுமக்கள் இந்திய மருத்துவ கழகம் மற்றும் தமிழ்நாடு சித்த மருத்துவ மன்றம் ஆகியவற்றில் பதிவு பெற்ற மருத்துவர்களாக என்பது குறித்த உண்மைத் தன்மையினை தெரிந்து கொண்ட பின்னர் மருத்துவர்களிடம் சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.
எனவே மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்கள் அவரவர் கீழே சித்தா, யோகா, இயற்கை மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மருத்துவ முறையில் ஒவ்வொரு மருத்துவரை கொண்ட குழு அமைத்து அதன் மூலம் பதிவு பெறாத ஆயுர்வேதா சித்தா யுனானி ஹோமியோபதி மற்றும் யோகா இயற்கை மருத்துவர்கள் போலியான சான்றிதழ் கொண்டு மருத்துவம் பார்க்க நேர்ந்ததால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் "போலி மருத்துவர்' என குறிப்பிட்டு புகார் தெரிவிக்கும் படி தெரிவித்துக் கொள்கின்றனர்.
கலர் தெரபி, மூலிகை வைத்தியம், அக்குபஞ்சர், அக்குபிரஷர் மற்றும் எலக்ட்ரோ ஹோமியோபதி மேக்னடிக் தெரபி முறையில் சிகிச்சை அளிப்பதாக கூறிக்கொண்டு போலி மருத்துவர்கள் உலா வருகின்றனர். அறிவிக்கப்படாத மருத்துவ பதிவு பெறாத இந்த அனைவரையும் அடையாளம் காணவும் போலி மருத்துவர்கள் என சந்தேகம் மேற்படி அவர்கள் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் தெரிவிக்கும்படி விபரங்கள் அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனர் கணபதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.