திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில், திருச்சி மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர்கள் கூலி திரைப்படம் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நடத்தினர். நடிகர் ரஜினிகாந்தின் போஸ்டர்களை
ஏந்தியவாறு கோவிலுக்கு அணிவகுத்து வந்த அவர்கள், படத்தின் வெற்றிக்காகவும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலத்துடன் பூரண ஆயுளுடன் வாழ வேண்டும் என்பதற்காகவும் பிரார்த்தனை செய்தனர்.
பூஜைக்குப் பின், ரஜினிகாந்த் பேனருக்கு முன்பு பூசணிக்காய் உடைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://www.threads.net/@trichy_vision
https://www.threads.net/@trichy_vision
Comments