துறையூர் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படாமல் கிடைக்கும் விவசாயிகள் நெல்.நெல்களை மூட்டை பிடிப்பதற்கு லோடுமேன் இல்லாததால் விவசாயிகள் கவலை…மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நெல்களை கொட்ட போவதாக விவசாயிகள் அறிவிப்பு….
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ளது பெத்துபட்டி கிராமம். இங்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது.இதனால் இக்கிராமத்தை சுற்றியுள்ள பகுதிகளான துலையநத்தம், கொத்தம்பட்டி, கண்ணனூர், மேலகுன்னுப்பட்டி, மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்கள் தோட்டத்தில் அறுவடை
செய்த நெல்லை இங்கு உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காகவைத்துள்ளனர். ஆனால் இங்கு மூட்டைகளில் நெல்லை அளப்பதற்கு லோடுமேன் இல்லாமல் நெல்கள் தேங்கி கிடக்கின்றன. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் கடந்த சில நாட்களாக இப்பகுதியில் இரவு நேரங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இந்த நிலையில் விவசாயிகளின் நெல்கள் மழையில் நனைந்து சேதம் ஆகிவிடும் என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இதனால் தங்களுக்கு பெரும் இழப்பீடு ஏற்பட்டு வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.எனவே தமிழக அரசு உடனடியாக தங்கள் நெல்களை கொள்முதல் செய்யாவிட்டால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நெல்களை கொட்டுவதாக விவசாயி தெரிவித்துள்ளனர்
Comments