ஐக்கிய விவசாயிகள் கூட்டமைப்பு (கட்சி சார்பற்றது) மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் மாநிலதலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் திருச்சியில் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது பி. ஆர் பாண்டியன் கூறுகையில் தேவையான இடங்களில் கூடுதலாக நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்கவேண்டும்.
தேவைக்குஏற்ப நெல்சேமிப்பு திறந்தவெளி கிடங்குகளை உடனே திறக்கவேண்டும்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான நெல்கொள்முதல் நிலையங்களில் தினசரி 40 கிலோ எடையுள்ள 500 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுவருகிறது. இந்தநிலையை மாற்றி தினசரி ஆயிரம் நெல்மூட்டைகளை கொள்முதல் செய்யவேண்டும்.
கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை உடனுக்குடன் அரவை ஆலைகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.
காலிப்பணியிடங்களை நிரப்பி, சுமைதூக்கும் தொழிலாளர் பற்றாக்குறையை போக்கவேண்டும்.
மத்திய அரசை காரணம் காட்டாமல், 22 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல்மணிகளை தடையில்லாமல் கொள்முதல்செய்யவேண்டும்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சம்பா, தாளடிநெல் சாகுபடிபணிகளை தொடங்கியுள்ள விவசாயிகளுக்கு தேவையான உரம், பூச்சிமருந்து உள்ளிட்டவை கிடைக்காமல் தவித்துவருகின்றனர். விதைநெல், உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவை தடையின்றிகிடைக்க வழிசெய்யவேண்டும்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கு மற்றும் தமிழக அரசு இரண்டுமே பொறுப்பேற்க வேண்டும். கரும்பு, நெல் உள்ளிட்ட விவசாயிகளின் விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வேண்டும் என்பன உள்ளிட்ட விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அனைத்து விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து, தமிழக முழுவதும் வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் பிரச்சாரப் பயணம் மேற்கொள்வது என முடிவு செய்துள்ளோம் என்றனர்.
அடுத்த தேர்தலிலாவது விவசாயிகளின் நலன்காக்கும் அரசை அடையாளம் காணவேண்டும், விவசாயிகளுக்கு விரோதமான திட்டங்களை செயல்படுத்தும் ஆட்சியாளர்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவது என தீர்மாணித்து உள்ளதாகவும், குண்டர் சட்டத்தில் விவசாயிகளை சிறையிலடைத்த அவலம் திமுக ஆட்சியில் தான் அரங்கேறியுள்ளது, விவசாயிகளின்நிலங்களை பாதுகாப்போம், லாபகரமான விலைதருவோம் எனகூறிவிட்டு கொடுத்தவாக்குறுதிகளைகூட நிறைவேற்றாமல் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்த்தது திமுக என பி.ஆர் பாண்டியன் குற்றச்சாட்டினார்.தனியார் காப்பீடு நிறுவனங்களுடன் கூட்டுசேர்ந்து திமுக விவசாயிகளிடம் கொள்ளையடிக்கிறது, கடந்த ஆண்டு சம்பாசாகுபடி பாதிப்பை ஆய்வுசெய்து அதற்கான நிவாரணம் தற்போதுவரை அரசால் வழங்கப்படவில்லை, அரசு ஊழியர்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டம் தீவிரம் அடையும் நிலையில் எதைப் பற்றியும் முதல்வர் கவலைப்படவில்லை.தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடித்திடவேண்டும் என்ற ஒரேகொள்கையில்தான் முதல்வர் செயல்பட்டுவருகிறார், மக்களையும் விவசாயிகளையும் புறந்தள்ளிவிட்டு மீண்டும் ஆட்சிஅமைப்பது மட்டுமே எண்ணமாக செயல்பட்டு வருகின்றனர். திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம், திருச்சி அல்லது தஞ்சாவூரில் இருந்து பிரச்சார பயணத்தை தொடங்கி சென்னையில் பயணத்தை நிறைவு செய்ய உள்ளோம் என்றார்.
அய்யாக்கண்ணு பேட்டியில் தற்போது நெல் கொள்முதல் வீணாகும் நெல்லை மனிதர்கள் சாப்பிட முடியாதநிலையில் உள்ளது விலங்குகளுக்கு தான் கொடுக்க வேண்டியநிலை உள்ளது, விவசாயிகளுக்கு உதவி செய்ய வேண்டிய எண்ணம் அரசுக்கு இல்லை, பத்தாயிரம்மூட்டை நெல் கொட்டிவைத்தநிலையில் 300 மூட்டைகள் மட்டுமே எடுக்கின்றனர். ஒரு மூட்டைக்கு 80 ரூபாய் லஞ்சம் கேட்கின்றனர், விவசாயிகள் அடிமைபோல வாழ்ந்து கொண்டிருக்கும் நிலை தமிழ்நாட்டில் தான் உள்ளது.
இந்த புகாரை திருச்சிவந்த முதலமைச்சரிடம் தெரிவிக்கசென்றால் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் விவசாயிகளை தடுக்கின்றனர், திருச்சி அமைச்சர் வீட்டின்முன்பு போலீசாரை நிறுத்தி விவசாயிகளை வெளியேறவிடாமல் தடுக்கின்றதாக குற்றம் சாட்டினார்.
லஞ்சம் எங்கே கொடுத்தால்தான் நெல்கொள்முதல் நிலையம் திறப்போம் என அதிகாரிகள் கூறுகின்றனர் என வேதனைபட்டதுடன், திட்டம் போட்டு நெல்லை கொள்முதல் செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டியது அரசின் கடமை ஆனால் மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்கு கிள்ளிக்கூட கொடுக்கவில்லை.ஒரு லட்சம் டிஎம்சி தண்ணீர் கோதாவரி யில் இருந்து வீணாக கடலில்கலக்கிறது, அதனை திருப்பி காவிரி கோதாவரி இணைத்தால் முப்போகம் விளைச்சல் கிடைக்கும்,
மேலும், லாபகரமான விலையில் வழங்கிடவும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்குவது போல விவசாயிகளுக்கு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், வயது முதிர்ந்த விவசாயிகளுக்கு மாதம் 5000 பென்ஷன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவ. 07ம் தேதி முதல் டெல்லி ஜந்தர்மந்தர் மைதானத்தில், 5 நாட்கள் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஊடகத்துறைக்கு கூட தமிழகத்தில் பாதுகாப்பில்லை அரசு தொலைக்காட்சியில் இருந்து புதியதலைமுறை நீக்கப்பட்டுள்ளது, அரசியல் கட்சிகள் கட்சிகள் கூட்டம் நடத்துவதற்குகூட அனுமதிக்கப்படவில்லை, குழுக்கள் அமைப்பதனால் மரணம் அடைந்த மக்களின் நியாயம் கிடைத்துவிடாது, குற்றவாளிகள் எண்ணிக்கை மற்றும் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது அதனை வெளியிடும் ஊடகங்களை முடக்கும் நிலையில் தமிழக அரசு உள்ளது, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்த போதும் அதனை செய்தியாக வெளியிட்ட ஊடகங்கள் முடக்கப்படவில்லை, இன்றைய புதிய தலைமுறை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை அடுத்து எல்லா தொலைக்காட்சி மீது ஏற்படும் என்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments