முக்கொம்பு மேலணையில் அல்லூர் வாய்க்காலுக்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுநல ஆர்வலர் நவதீதன் கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் முக்கொம்பு மேலணையில் இருந்தது அல்லூர் வாய்க்கால் மூலம் கிடைக்க பெறும் நீரின் மூலமாக சுமார் நான்காயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன.
ஜூன் 12 முதல் மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட நீர் பல்வேறு பகுதிகளுக்கு பாசன வசதிக்காக திறந்து விடப்பட்ட நிலையில் அல்லூர் வாய்க்கால் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டு விவசாயிகளுக்கு உதவிட வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளதாக கூறியுள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/KXPqSPrc2vf6QE7SbvFzFC







Comments