கடந்த ஒரு மாத காலமாக தக்காளியின் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.
இதனால் விவசாயிகள் தங்கள் வயல்களில் விளைவித்த தக்காளிக்கு உரியவிலை கிடைக்காமலும், இடைத்தரகர்கள் ஆதிக்கத்தினாலும் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தக்காளி விலை வைத்து விவசாயிகள் அதற்கான செலவையும் எடுக்க முடியாமலும் வண்டி வாடகைக்கு கூட தக்காளி விலை விற்காததால் மிகுந்த வேதனைக்கு உள்ளாளனர். மார்க்கெட்டுக் கொண்டு சென்று விற்க முடியாத நிலையில் இருந்தனர்.
இந்நிலையில் தொடர்சரிவால் மனமுடைந்த விவசாயிகள் தங்களது வயலில் விளைந்த சுமார் இரண்டு டன் தக்காளிகளை காவிரி ஆற்றில் கொட்டி சென்றுள்ள அவலம் திருச்சியில் அரங்கேறியுள்ளது.

தக்காளிக்கு உரிய விலை கிடைக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து தக்காளி பயிர் இட்ட விவசாயிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இது போன்ற நேரங்களில் தக்காளிக்கு வேறு உபயோகத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments