3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் கோரியும், மழையில் அழிந்து வரும் 40 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்யக் கோரியும், உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்தவர்களுக்கும் செய்ய தூண்டியவர்களுக்கும் மரண தண்டனை வழங்க கோரியும் உள்ளிட்ட
கோரிக்கைகளுடன் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 46 நாட்கள் உண்ணாவிரதம் கரூர் பைபாஸ், மலர் சாலையில் நடத்தப்பட்டு வருகிறது.இன்று (25.10.2021) 14வது நாளாக இன்று விநோத முறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் இரண்டு மடங்கு லாபம் தரும் விலை தந்து விவசாயிகள் நெஞ்சில் நிறைவை ஏற்படுத்துகிறேன் என்று கூறிய மோடி ஐயா கடந்த ஏழு வருடங்களாக இரண்டு மடங்கு லாபகரமான விலை தராமல் விவசாயிகளை மோடி ஐயா ஏமாற்றி விவசாயிகள் நெஞ்சில் கல்லை தூக்கி போட்டு விட்டார் என்பதற்காக நெஞ்சில் மோடி அய்யா போட்ட கல்லுடன் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments