கர்நாடகாவும், கேரளாவும் தமிழக மக்கள் குடிப்பதற்கும், விவசாயிகள் விவசாயம் செய்வதற்கும் தண்ணீர் தர மறுத்து மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீரை வீணாக கடலில் விடுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் காவிரி, கொள்ளிடத்தில் உள்ள மணலை அள்ளி கேரளா, கர்நாடகத்திற்கு கொண்டு செல்ல முயற்சிப்பவர்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்க கூடாது என்றும்,
காவிரி, கொள்ளிடத்தில் லாரி மூலமாக மணல் அள்ளி சென்று நிலத்தடி நீர் மட்டத்தை கீழே கொண்டு செல்வதற்கு தமிழக அரசு அனுமதி வழங்க கூடாது என்பதை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்பு மாவட்ட ஆட்சியர் சிவராசு விவசாயிகளை சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தார். பின்னர் அவர்களிடம் இதற்கான மனுவை பெற்றுக்கொண்டார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/JGMr6bBQJfFC6SA9x0ZYzj
#டெலிகிராம் மூலமும் அறிய… https://t.co/nepIqeLanO







Comments