மேகதாது அணைக்கட்ட திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியதை மறுபரிசீலனை செய்திட வேண்டும், டெல்டா உள்ளிட்ட 22 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரத்தை பாதிக்கும் மேகதாது அணைகட்ட அனுமதிக்க கூடாது, மேகதாது அணைகட்டுவதை வேடிக்கை பார்க்கும் தமிழக அரசை கண்டித்தும், தமிழ்நாட்டின் வேளாண் உணவு உட்கொண்டியை பாதுகாக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம், காவிரி உரிமை மீட்பு குழு மற்றும் பல்வேறு பொதுநல அமைப்புகள் சார்பில் திருச்சி ஜங்ஷன் காதி கிராப்ட் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் சின்னத்துரை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கையில் நெல் மணிகள், காவிரிநீர், வாழைமரம், ஏர் கலப்பையுடன் பங்கேற்று முழக்கங்கள் எழுப்பினார்கள்.
தமிழக மக்கள் ஜல்லிக்கட்டு போராட்டம் நடத்தியதுபோல காவிரி நீருக்காக போராட்டம் நடத்த முன்வர வேண்டும், உச்சநீதிமன்ற தலைமை நீதி அரசர் ஹவாய் அவர்கள் நவம்பர் மாதம் இறுதியில் ஓய்வுபெறும் நிலையில், தற்போது அறிவித்துள்ள இந்ததீர்ப்பு அணை கட்டுவதற்கு அளித்துள்ள ஒப்புதல் என்றே கருதலாம்,
தமிழக அரசு இனியும் காலம்தாழ்த்தாமல் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய வேண்டும், தமிழகம் தழுவிய பந்தை அறிவிக்க வேண்டும் எனவும் விவசாய சங்கத்தினர் வலியுறுத்தி கேட்டுக்கொண்டனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments