திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட ஆலம்பட்டி புதூர் அடுத்த தெற்கு சேர்பட்டி கிராமத்தில், பால் கொள்முதல் நிலையம் திறக்க மறுக்கும் திமுக அரசை கண்டித்தும், ஆவினுக்கு பால் கொள்முதல் செய்ய மறுத்து தனியாருக்கு சப்ளை செய்யும் நோக்கில் செயல்பட்டு வரும் அதிகாரிகள் மற்றும் அரசை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஆட்சியர் அலுவலகம் எதிரில் பாலை தரையில் கொட்டி போராட்டத்தில் கறவை மாடு வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் ஈடுபட்டனர்.
அரசு உடனடியாக விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஆவின் பால் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் இல்லை என்றால் அடுத்த கட்டமாக விளம்பர திமுக அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments