Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் 16வது நாளாக நடைபெறும் விவசாயிகள் போராட்டம்

3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலை தரக் வேண்டும் அதுவரை விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், மழையில் அழிந்து வரும் 40 லட்சம் நெல் மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசத்தில் அமைதியாக ஊர்வலம் சென்ற விவசாயிகளை திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்தவர்களுக்கும் செய்ய தூண்டியவர்களுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 46 நாட்கள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது .

கரூர் பைபாஸ், மலர் சாலையில் உள்ள இச்சங்கத்தின் மாநில தலைவர் இல்லத்தில் நடைபெறும் இப்போராட்டம் பதினாறாவது நாளான இன்று (27.10.2021) மத்திய அரசு விவசாயிகளுக்கு இரண்டு மடங்கு லாபம் தருகிறேன் என்று கூறிவிட்டு இரண்டு மடங்கு லாபம் தராமல் ஏமாற்றி விவசாயிகள் நெஞ்சில் கல்லை போட்டு விட்டதாக குற்றம்சாட்டி அதனை பிரதிபலிக்கும் வகையில் இறந்த விவசாயிகளின் எலும்புகளுக்கு பால் தெலித்து ஈமக்காரிய உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus 

டெலிகிராம் மூலமும் அறிய…

https://t.me/trichyvisionn 

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *