Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் போராட்டம்: நாக்பூர் சம்மன் ரத்து, திருச்சி ஜங்ஷனில் பரபரப்பு

விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலை வழங்கிடவும், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்திடவும் வலியுறுத்தி டெல்லியில் கடந்த நவம்பர் 20ம் தேதி போராட்டத்திற்கு சென்ற அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் நாக்பூரில் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டு கைதுசெய்யப்பட்டதால், ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின்மீது நாக்பூர் ரயில்வே பாதுகாப்புபடை போலீசார் வழக்குபதிவுசெய்தனர்.

நாளை 26ம் தேதி நாக்பூர் ரயில்வே பாதுகாப்பு படை நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தனர்.

இதனையடுத்து அரை நிர்வாணத்துடன் நாக்பூர் செல்வதற்கு அய்யாக்கண்ணு தலைமையில் 10 விவசாயிகள் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வந்தனர்.

அப்போது நாக்பூரில் ஆஜராக அனுப்பியுள்ள சம்மனை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரத்து செய்து அவர்களை வீட்டிற்கு செல்ல நிர்பந்தித்தனர்.

இந்த நிலையில் ஏற்கனவே டெல்லி போராட்டத்திற்கு சென்ற விவசாயிகளுக்கு ரயில் டிக்கெட் களுக்கு முழு தொகையை இழப்பீடாக வழங்கிட வலியுறுத்தி ரயில் நிலையத்திலேயே விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது, அதே நேரம் விவசாயிகளின் போராட்டத்தால் ரயில் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகினார்கள்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *