கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய தண்ணீரை திறந்து விட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் தலையில் துண்டு போட்டு கையில் திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தமிழ்நாட்டில் குருவை சாகுபடிக்காக தற்பொழுது தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அடுத்து சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது தற்பொழுது 80 டிஎம்சி அளவில் தான் மேட்டூரில் தண்ணீர் உள்ளது. எனவே கர்நாடக அரசு 177.25 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும். அதற்கு உன் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய அரசின் விவசாயிகளுக்கான திட்டங்கள் தமிழக விவசாயிகளுக்கு வந்து சேருவதில்லை மற்ற
மாநில விவசாயிகளுக்கு மட்டுமே மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது எனவே விவசாயிகளுக்கான திட்டத்தை தமிழ்நாட்டு விவசாயிகளும் பயன்பெறும் வகையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக முதலமைச்சரும் இது குறித்து மத்திய அரசு உடனே பேச வேண்டும், இலவச மின் இணைப்புக்காக விண்ணப்பித்து காத்திருக்கும்
விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின் இணைப்பை வழங்க வேண்டும், மக்காச்சோளத்தை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும், வனவிலங்குகளால் பாதிக்கப்படும் விவசாய பயிர்களுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர்
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தலையில் துண்டு போட்டு கையில் திருவோடு ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளை வஞ்சிக்காமல் விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை எங்களுடைய கோரிக்கைகளை உடனடியாக மத்திய மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்பட்டால் சென்னை தலைமை செயலகத்தை முற்றுகையிடும்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர. சங்கத்தின் மாநிலத் தலைவர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments