தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காவேரி மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. கல்லூரி முதல்வர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட காவேரி மருத்துவமனை சாரபாக காவேரி மருத்துவமனை கற்றல் மேம்பாட்டுத்துறை இணைப் பொது மேலாளர் முனைவர் பு.சுப்புரத்தின பாரதி மற்றும் CSR மேலாளர் மனோஜ் தர்மா ஆகியோர் கையெழுத்திட்டனர்,கல்லூரியின் சார்பாக நிறுவன மேலாண் குழு ஒருங்கிணைப்பாளரும் வணிகவியல் துறை இணைப்பேராசிரியருமான முனைவர் செ.பரமசிவம், யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளரும்
தமிழ் இணைப் பேராசிரியருமான முனைவர் இரா.குணசேகரன், பெண்கள் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர்கள் ஆங்கிலத்துறை பேராசிரியர்கள் முனைவர் ரெ.பிரேமா, முனைவர் சோ.ஜெயலட்சுமி, கணிதத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் பு.புனிதா, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ஒருங்கிணைப்பாளரும் ஆங்கிலத்துறை பேராசிரியருமான முனைவர் அ.நோபல் ஜெபக்குமார், கணினி பயன்பாட்டியல் பேராசிரியர் முனைவர் பி.எஸ்.எஸ்.கோபி,நாட்டு நலப்பணித்திட்ட அலுவலரும் இயற்பியல் துறைப் பேராசிரியருமான முனைவர் தைரியராஜா, முனைவர் செந்தில், சுகாதாரம் மற்றும் ஆலோசனை மைய பொறுப்பாளரும் உயிர்வேதியியல் பேராசிரியருமான முனைவர் அய்யாவு,
தேசிய தரமதிப்பீட்டுக் குழு பொறுப்பாளர் முனைவர் இராதா ஆகிய மையப் பொறுப்பாளர்களுடன் இணைந்து விழிப்புணர்வு கருத்தரங்கம், பயிலரங்கம், மருத்துவ முகாம் ஆகியவையை செயல்படுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இதன்மூலம் கல்லூரி மணவ-மாணவியர் பயனடைவர் என கல்லூரி முதல்வர் அவர்கள் தெரிவித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments