திருச்சிராப்பள்ளி மாவட்டம். துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த மணிகண்டன் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) 42/25, த.பெ பொன்னுசாமி, என்பவர் 16 வயது பூர்த்தியடையாத தனது மகளான பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கடந்த 04.08.2018 அன்று இரவு சாப்பிடுவதற்கு பரோட்டா வாங்கி அதில் ஏதோ கலந்து கொடுத்ததாகவும், இதனால் அசதியாக தூங்கிய சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார்.
அதன்பின்னரும் சிறுமியை மிரட்டி மூன்று மாத காலம் பலமுறை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். இந்நிலையில், கடந்த 03.08.2019 அன்று மேற்படி சிறுமிக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அலுவலர் திருமதி.கீதா என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் எதிரி மணிகண்டன் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) மீது திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண் 13/19, U/s 376(3) IPC & 5(n), 5(1), 5(j)(ii), 6 of POCSO Act-2012. ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கின் விசாரணை திருச்சி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக செல்வி.சுமதி ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (16.10.2025) திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி திருமதி. சண்முக பிரியா அவர்கள் எதிரி – மணிகண்டன் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) 42/25, த.பெ பொன்னுசாமி என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையை எக காலத்தில் அனுபவிக்குமாறும், ரூபாய். 20,000 அபராதமும், வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
இவ்வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்தமைக்காக திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. உமா மகேஸ்வரி மற்றும் நீதிமன்ற பெண் தலைமை காவலர் திருமதி. அகிலா ஆகிய இருவரையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.செ.செல்வநாகரத்தினம், இ.கா.ப அவர்கள் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision
Comments