ஏஐடியுசி தலைமையிலான கட்டுமான தொழிலாளர் மகா சம்மேளனம் நாடு முழுமையிலும் கட்டுமான தொழிலாளர்கள் பாரதப் பிரதமருக்கு.. தொழிலாளர்களுக்கு விரோதமான நான்கு சட்ட தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும் ,60 வயதில் ஓய்வூதியம் ரூபாய் 6 ஆயிரம் வழங்க வேண்டும் ,வீட்டுமனை இல்லாத தொழிலாளர்களுக்கு வீட்டு மனை வழங்கி வீடு கட்டி கொடுக்க வேண்டும்,நலநிதி இரண்டு சதவீதம் உயர்த்தி வசூல் செய்ய வேண்டும் ,இ எஸ் ஐ, பி எஃப் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச

கோரிக்கைகளை முன்வைத்து ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு ஒவ்வொரு தொழிலாளியும் கையெழுத்திட்ட தபால் அனுப்பு இயக்கம் திருச்சி மாநகர் மதுரை ரோடு குப்பங்குளம் கிளை கட்டுமான தொழிற்சங்க கிளைத் தலைவர் முருகேசன் தலைமையில் வரிசையாக அணிவகுத்து திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையத்தில் மாநிலத் துணைத் தலைவர் க.சுரேஷ் தபால்களை அனுப்புவதை துவக்கி வைத்தார். துணைத் தலைவர்கள் ஜெகதீசன்,அழகேசன், முருகன் செயலாளர் ஏ. முருகேசன் முன்னிலை வகித்தனர் .திருச்சி மாவட்ட ஏஐடியுசி துணைத் தலைவர் எஸ். சிவா பங்கேற்று சிறப்பித்தார் .
திருச்சி ஜங்ஷன் தலைமை தபால் நிலையம் முன்பாக மாவட்ட துணை செயலாளர் தலைவர் எம்.சுமதி தலைமையில் பாரதப் பிரதமருக்கு கட்டுமான தொழிலாளர்கள் தபால் அனுப்பும் இயக்கம் நடைபெற்றது .கட்டட சங்க மாநில துணைத்தலைவர் க. சுரேஷ் , திருச்சி மாவட்ட ஏஐடியுசி துணைத்தலைவர் எஸ்.சிவா துவக்கி வைத்தனர் .

கட்டட சங்க மாவட்டத் துணைத் தலைவர் துரைராஜ் தேசியக்குழு உறுப்பினர் நிர்மலா தரைக்கடை சங்க மாவட்ட துணைத் தலைவர் சுரேஷ் முத்துசாமி உள்ளிட்ட கட்டுமான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.25வது வார்டு உய்ய கொண்டான் திருமலை தபால் நிலையத்தில் கிளைச் தலைவர் ரேணுகா தலைமையில் தபால் அனுப்பும் இயக்கம் நடைபெற்றது .
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments