திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வாளாடியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் யுவராஜா என்பவரின் குடும்பத்தாருக்கும், அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் ஜெகதீசன் என்பவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக லால்குடி மகளிர் காவல் நிலையத்தில் யுவராஜ் அளித்த புகாரின் பேரில் ஜெகதீசன் என்பவரின் மீது கடந்த (02.11.2022) அன்று POCSO சட்டத்தின் கீழ் லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மாலதி என்பவர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வரும் நிலையில் இவ்வழக்கிற்கு குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று காவல் ஆய்வாளர் மாலதி யுவராஜாவிடம் ரூபாய் 5000 லஞ்சமாக பணம் கேட்டுள்ளார். மேலும் லஞ்ச பணத்தை (13.12. 2022) காவல் நிலையம் வந்து தன்னிடம் கொடுக்க வேண்டுமாறும் கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத யுவராஜ் திருச்சி லஞ்ச ஒழிப்பு துறைக்கு வந்து அளித்த புகாரின் பேரில் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசாரின் ஆலோசனையின் பேரில் யுவராஜிடமிருந்து இன்ஸ்பெக்டர் மாலதி 5000 லஞ்சமாக பெற்றபோது இன்று (13.12.2022) காலை 10 மணி அளவில் கையும் களவுமாக பிடிபட்டார். இன்ஸ்பெக்டர் மாலதி மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO



            
            
            
            
            
            
            
            
            
            


Comments