திருச்சி கருமண்டபம் சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் . 40 வருடமாக அங்கு வசித்து வரும் அவர் அந்தப் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார் டிரைவராகவும் பணியாற்றி வருகிறார். இவர் அந்தப் பகுதியில் ராமகிருஷ்ணா நகரில் 2400 சதுர அடி காலி மனையை 2002 ஆம் ஆண்டு வாங்கியுள்ளார்.2008 ஆம் ஆண்டு மனையை சென்று பார்க்கும் பொழுது வேறொருவர் அந்த இடத்தில் வீடு கட்ட தொடங்கியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் யார் இங்கு வீடு கட்டி உள்ளார் என்று விசாரித்த பொழுது கார்த்திகேயனி என்ற பெண் இன்ஸ்பெக்டர் அந்த இடத்தில் வீடு கட்டி இருந்தது தெரிய வந்தது. அந்தப் பெண் காவல் அதிகாரியை தொடர்பு கொண்டு என்னிடத்தில் நீங்கள் வீடு கட்டி உள்ளீர்கள் என்று கேட்ட பொழுது இல்லை இது என்னுடைய இடம் என்னுடைய இடத்தில் நான் கட்டி உள்ளேன் என்று அவர் பதில் அளித்துள்ளார்.
குணசேகர் VAO அலுவலகத்திற்கும், தாசிலர் அலுவலகத்திற்கும் சென்று தன் பெயரில் இந்த இடம் உள்ளதா என்று சரி பார்த்துள்ளார்அப்பொழுது அந்த அதிகாரிகள் உங்கள் பெயரில் தான் இந்த இடம் பதிவாகியுள்ளது என்று இரண்டு அலுவலகங்களிலும் பதில் அளித்துள்ளனர். மீண்டும் குணசேகரனை தொடர்பு கொண்ட பெண் காவலர் கார்த்திகேயனி என்னுடைய இடத்தை உங்கள் பேரில் பதிவு செய்து உள்ளீர்கள் என்று மிரட்டல் விடுத்துள்ளார். மீண்டும் ஒரு வாரம் கழித்து அந்தப் பெண் காவலர் குணசேகர் வீட்டிற்குச் அடியாட்களுடன் சென்று மிரட்டி உள்ளார்.மீண்டும் திருச்சி 56 ஆவது திமுக வட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் உடன் வீட்டிற்கு சென்று மிரட்டி உள்ளார் இந்த பெண் காவலர்.
வட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் குணசேகரனிடம் ஒரு லட்சமோ 2 லட்சமா வாங்கிக் கொண்டு அந்த இடத்தை கையெழுத்துப் போட்டுத் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார் . மீண்டும் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனி குணசேகரனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு இடத்தை தன் பெயரில் மாற்றித் தருமாறு மிகவும் மோசமாக மிரட்டும் தோனியில் பேசி உள்ளார்.
என்ன செய்வது என்று தெரியாமல் சிஎம் செல்லில் புகார் கொடுத்தபொழுது மீண்டும் என்னைப் பற்றி சிஎம் செல்லுக்கு புகார் கொடுக்கிறியா என்று அந்த பெண் காவலாளி குணசேகரனை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார் இதனால் மனமுடைந்த குணசேகரன் தற்கொலைக்கு முயற்சி செய்து காப்பாற்றப்பட்டுள்ளார். இந்த இடத்தை தமிழக முதலமைச்சரும் காவல்துறையினரும் முறையாக விசாரணை நடத்தி தனக்கு மீட்டுத் தருமாறு கண்ணீர் மல்க தெரிவித்தார் குணசேகரன்.
பெண் காவல் அதிகாரி இப் பிரச்சினைக்கு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் இடம் என் பெயரில் தான் உள்ளது எது நடந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…
Comments