இந்திரா கணேசன் கல்வி நிறுவனக் குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை, திருச்சிராப்பள்ளி, மற்றும் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு இணைந்து ‘ஐஜிதான் மோல் 2.0’ என்னும் புதுமை யோசனைகள் போட்டிகளின் முதல் கட்ட நிகழ்ச்சி 13.9.2025 அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இந்திரா கணேசன் கல்விக் குழுமங்களின் செயலர், திரு.இராஜசேகரன் தலைமை ஏற்று தலைமை உரை ஆற்றினார். இயக்குனர் முனைவர். பாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். பதிவாளர் முனைவர். அனுசுயா தொகுப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சிக்கு திரு.பாலகிருஷ்ணன் மோகன்தாஸ், மூத்த தயாரிப்பு மேலாளர், KO இனவேஷன் மென்பொருள் சொல்யூஷன்ஸ், திருச்சி, மற்றும் டாக்டர் கே. நித்யா முதல்வர், மருந்தியல் கல்லூரி, இந்திரா கணேசன் கல்விக் குழுமம், ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், மதிப்பீட்டாளர்களாகவும் செயல்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கருப்பொருள்களை கொண்ட பல்வேறு புதுமையான யுக்திகள் மற்றும் யோசனைகளை மாணவர்கள் துறைகளுக்கேற்ப வழங்கினர்.
இந்த முதல் கட்ட போட்டியில் காவேரி மகளிர் கல்லூரி திருச்சி, என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி கோயம்புத்தூர், கே. எஸ்.ஆர் பொறியியல் கல்லூரி, திருச்செங்கோடு, சேது பொறியியல் கல்லூரி, விருதுநகர், இந்திரா கணேசன் மருந்தியல் கல்லூரி, இந்திரா கணேசன் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா கல்லூரி, இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி, இந்திரா கணேசன் அலைட் ஹெல்த் சயின்ஸ் கல்லூரி, திருச்சி ஆகிய பல்வேறு கல்லூரிகளில் இருந்து மொத்தம் 29 மாணவர் குழுக்கள் பங்கேற்றனர்.
மதிப்பீட்டாளர்கள் மாணவர்களின் புதுமையான யோசனைகள் மற்றும் புதுமையான பொருட்களை மேம்படுத்த தேவைப்படும் யோசனைகளையும் தகுந்த பின்னூட்டங்களையம் வழங்கினர்.
மாணவர்களின் புதுமையான யோசனைகள் மதிப்பீடு செய்யப்பட்டு, சிறந்த புதுமையான யுக்திகள் அடுத்த கட்ட மதிப்பீட்டிற்காக பரிந்துரைக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியை ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் கே. சித்ராதேவி, முதல்வர், அலைடு ஹெல்த் சயின்ஸ், இந்திரா கணேசன் கல்வி குழுமம், முனைவர். ஸ்ரீராம், முனைவர் ஆர். பரத் குமார் மற்றும் முனைவர் ப. வரலட்சுமி இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments