(IGthon – Mole 2.0 Hackathon Final Evaluation) இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை, “புதுமை சிந்தனையை முன்வைக்கும் இறுதி சுற்று போட்டி “ (IGthon – Mole 2.0 Hackathon Final Evaluation) என்ற நிகழ்வை 7 நவம்பர் 2025 அன்று சிறப்பாக நடத்தியது. தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 18 அணிகள் இறுதிச்சுற்றுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, சுற்றுச்சூழல் நட்பு தீர்வுகள், புதுமையான IoT கண்டுபிடிப்புகள், சுகாதாரம் மற்றும் மருத்துவ பயன்பாடுகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் தங்களது புதுமையான யோசனைகளை வெளிப்படுத்தினர்.
நிகழ்ச்சி தொடக்கத்தில் இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் செயலாளர் ஜி. இராஜசேகரன் அவர்கள் துவக்க உரையாற்றி, புதுமை கண்டுபிடிப்புகள் நாட்டின் வளர்ச்சிக்குத் தரும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அதன் பின், இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்களின் இயக்குநர் முனைவர் ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்துரையாற்றி, ஆராய்ச்சி, ஒத்துழைப்பு மற்றும் புதுமைமையம் ஆகியவை கல்வி வளர்ச்சிக்கு அவசியமானவை என்பதை சுட்டிக்காட்டினார்.
நிகழ்ச்சியின் முழுமையான கண்ணோட்டத்தை முனைவர் டி. அனுசுயா, பதிவாளர், விளக்கமளித்தார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக
ரொட்டேரியன் AKS டாக்டர் கே. ஸ்ரீனிவாசன், ஆலோசகர், இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள் மற்றும் தலைவர், இந்திய ரெட்கிராஸ் சொசைட்டி, ஸ்ரீரங்கம் கிளை, கலந்து கொண்டு மாணவர்களின் புதுமையான சிந்தனைகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்ததுடன், தொழில்முனைவு உணர்வுடன் அவர்கள் யோசனைகளை செயல்படுத்த ஊக்கமளித்தார். மேலும், வெற்றி பெற்ற அனைத்து அணிகளுக்கும் வழங்கப்பட்ட பணப்பரிசுகளை டாக்டர் கே. ஸ்ரீனிவாசன் அவர்கள் அனுசரணையாக வழங்கினார்.
நீதிபதிகள் குழுவில் டாக்டர் பி. கருப்பண்ணன் (Project Lead, StartupTN, திருச்சி & தஞ்சாவூர் பிராந்திய மையம்), எஸ். எம். மனோஜ் குமார் (Project Lead, StartupTN, திருச்சி), மற்றும் டாக்டர் என். என். பாபி (Principal, College of Physiotherapy, Shri Indra Ganesan Institute of Medical Science) ஆகியோர் இணைந்தனர்.
விழாவில் நடைபெற்ற ஆர்வமூட்டும் யோசனை முன்வைப்பு சுற்றுக்குப் பிறகு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
முதல் பரிசு – KSR College of Technology, Tiruchengode, இரண்டாம் பரிசு – Cauvery College for Women (Autonomous), Trichy, மூன்றாம் பரிசு – Shri Indra Ganesan College of Pharmacy, Trichy
வெற்றி பெற்ற அணிகளுக்கு பணப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், மாணவர்களை சிறப்பாக வழிநடத்திய அவர்களின் வழிகாட்டர்க்கு “Mentor Shield” வழங்கப்பட்டது. அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி வரவேற்பு உரையுடன் துவங்கி, நன்றி உரையுடன் நிறைவுற்றது.
இந்நிகழ்ச்சி சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது.
இதற்கான ஒருங்கிணைப்பாளர்களாக டாக்டர் கே. சித்ரா தேவி (முதல்வர், இணை நல அறிவியல் பள்ளி), டாக்டர் டி. ஸ்ரீராம், டாக்டர் ஆர். பாரத் குமார், மற்றும் டாக்டர் ப. வரலக்ஷ்மி ஆகியோர் பொறுப்பேற்றனர். இந்த நிகழ்வு மாணவர்களின் புதுமை, ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவு திறன்களை ஊக்குவிக்கும் வகையில் மிகச் சிறப்பாக அமைந்தது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments