தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடினர். தீயானது தேநீர் கடை அருகில் உள்ள பலகார கடை உள்ளிட்ட 7 கடைகளுக்கு பரவியது. காந்தி மார்க்கெட் உள்ளே தீ பரவாமல் இருப்பதற்காக தீயணைப்பு வீரர்கள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். டீக்கடையில் பலகாரம் போட்டு கொண்டிருந்தவருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
காந்தி சந்தை சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் தேநீர் கடையில் மின்கசிவு காரணமாக அங்கு உள்ள சிலிண்டர்கள் எரிய துவங்கி உள்ளது. உடனடியாக அதிலிருந்த பத்துக்கும் மேற்பட்ட சிலிண்டர்களை பாதுகாப்பாக தீயணைப்பு வீரர்கள் வெளியே எடுத்தனர்.
7 கடைகளிலுள்ள 25 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக தகவல் தெரிவித்தனர். விபத்து குறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காந்தி சந்தை உள்ளேயும் வெளியேயும் இதுவரை மூன்று முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/JkCD459G9UQE7IpwNM1sth
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn







Comments