திருச்சி மாநகர் கன்டோன்மென்ட் பகுதியில் பஜாஜ் இருசக்கர வாகன விற்பனை நிலையம் அமைந்துள்ளது இதற்கு மாடியில் தனியாருக்கு சொந்தமான அழகு நிலையம் ஒன்று அமைந்துள்ளது .
இன்று பணியாளர்கள் பணி செய்து கொண்டிருந்த போது மின் குளிர்சாதன பெட்டியில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்துக்குள்ளானது . உடனடியாக வெளியே வந்த ஊழியர்கள் கன்டோன்மென்ட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அனைத்து அங்கு சூழ்ந்திருந்த புகை மண்டலத்தை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர் .
தீயணைப்புத் துறையினரின் உடனடி நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது .
Comments