திருச்சி ஒத்தக்கடை பகுதியில் பிரபலமான காம்ப்ளக்ஸ் (TABS COMPLEX) ஒன்று இயங்கி வருகிறது. இதில் செல்போன் நிறுவன கடைகள், பைனான்ஸ், ஹோட்டல், கொரியர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இந்த அடுக்குமாடி காம்ப்ளக்ஸில் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் இன்று காலை திடீரென மூன்றாவது மாடியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனத்திலிருந்து ஜன்னல் வழியாக புகை வந்துள்ளது. உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முற்பட்டனர். ரிஸ்வானா டிராவல்ஸ் நிறுவனத்தில் உள்ள பொருட்கள் அனைத்தும் தீயில் இருந்து நாசமாயின. முக்கியமாக இந்த டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவனம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்பவர்கள் வேலைக்கு
செல்பவர்கள் தங்களது பாஸ்போர்ட்டை கொடுத்து அதன் மூலம் விசா பெறுவதற்கான நடவடிக்கைகளை இவர்கள் மேற்கொள்வார்கள் இதில் உள்ளே இருந்த பாஸ்போர்ட்டுகள் எரிந்து நாசமாகி உள்ளன.
சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
தீ விபத்து குறித்து கண்ட்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments