Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

துவரங்குறிச்சி அருகே மலை குட்டில் தீ விபத்து.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த செவல்பட்டி அருகே உள்ள கவுண்டம்பட்டி பகுதியில் குட்டி கருப்ப கோயிலுக்கு எதிரில் உள்ள குட்டி கருப்ப குட்டுப் பகுதியில் இரவு திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியது. உடனடியாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் நிலை அலுவலர் மனோகர் தலைமையிலான

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்பகுதிக்கு வாகனத்தை இயக்க முடியாததால் வீரர்கள் மட்டும் சென்று அருகில் இருந்த செடி கொடிகளை வைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மலையை சுற்றி பல பகுதியில் தீ பற்றி எரிந்து வருவதால் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ,வனத்துறையினர் மற்றும் இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
காய்ந்த சருகுகள் லெமன் வகை புற்கள் அதிக அளவில் தீ பற்றி எரிந்து வருகின்றன.


மேலும் இந்த குட்டு பகுதியில் காட்டு எருமை,முயல் மான்,பாம்பு உள்ளிட்ட விலங்கினங்கள் வாழ்ந்து வருகின்றன.மேலும் இந்த குட்டு வருவாய் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. சம்பவ இடத்தில் துவரங்குறிச்சி வருவாய் ஆய்வாளர் சுந்தர வடிவு ஆய்வு மேற்கொண்டார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *