திருச்சி மாவட்டம் லால்குடி அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள லால்குடி தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு ஒத்திகை பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில் லால்குடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் தலைமையில் தீத்தடுப்பு மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள லால்குடி தீயணைப்பு வீரர்கள் ஒத்திகை பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
இதில் தீ விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் பொதுமக்களை எப்படி காப்பாற்றுவது, அவர்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கமளித்து ஒத்திகை பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
இந்நிகழ்வில் லால்குடி தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் சிறப்பு நிலைய அலுவலர் பிரபு வீரர்கள் சுரேஷ், கார்த்திக், அலோசியஸ், விஜய் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments