திருச்சி திருவெறும்பூர் அடுத்த குண்டூர் பகுதியில் உள்ள 100 அடி சாலையில், தமிழ்நாடு மாநில குதிரை உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் நலச்சங்கத்தின் சார்பில் முதலாம் ஆண்டு குதிரை பந்தயம் நடந்தது.
இப்போட்டியினை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த போட்டியில் புதுக்குதிரை ஒன்று மற்றும் இரண்டு பிரிவுகளிலும் அளவு குதிரை 43 மற்றும் 45 ஆகிய பிரிவுகளிலும், நடு குதிரை மற்றும் பெரிய குதிரை என ஆறு பிரிவுகளில் குதிரை பந்தயம் நடைபெற்றது.
புதுக்குதிரை ஒன்று மற்றும் இரண்டிற்கு முதல் பரிசு ரூ20 ஆயிரம் இரண்டாவது பரிசு ரூ15 ஆயிரம், மூன்றாவது பதிவு ரூ12ஆயிரம் நான்காவது பதிவு ரூ10 ஆயிரம்,
43 அளவு குதிரை 7மைல் தூரம் முதல் பரிசு ரூ25ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ 20 ஆயிரம், மூன்றாவது பரிசு ரூ15 ஆயிரம், நான்காவது பரிசு ரூ 12 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது.
45 அளவு குதிரை 8மைல் தூரம் முதல் பரிசு ரூ30 ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ25 ஆயிரம் மூன்றாவது பரிசு ரூ20 ஆயிரம்நான்காவது பரிசு ரூ12 ஆயிரம் வழங்கப்பட்டது.
நடு குதிரை 9 மைல் தூரம் போட்டியில் முதல் பரிசு ரூ40 ஆயிரம் இரண்டாவது பரிசு ரூ30 ஆயிரம் மூன்றாவது பதிவு ரூ20ஆயிரம், நான்காவது பரிசு ரூ13 ஆயிரம் வழங்கப்பட்டது.
பெரிய குதிரை 10 மைல் தூரம் போட்டியில் முதல் பரிசு ரூ50 ஆயிரம் இரண்டாவது பரிசு ரூ 40 ஆயிரம் மூன்றாவது பரிசு ரூ30 ஆயிரம் நான்காவது பரிசு ரூ15 ஆயிரம் வழங்கப்பட்டது.
போட்டியில் சீறிப்பாய்ந்து வெற்றி பெற்ற குதிரைகளின் உரிமையாளர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கோப்பைகளையும் ரொக்க பரிசு தொகையினையும் வழங்கி பாராட்டினார்.
அவர் போட்டியினை துவக்கி வைத்த போது குதிரை முட்டியதில் திமுக பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் ஒன்றிய துணைத் தலைவருமான சண்முகம் கீழே விழுந்ததில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments