முதல் தலைமுறை வாக்காளர்கள் எதன் அடிப்படையில் தங்கள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரை தேர்வு செய்ய உள்ளார்கள்?

முதல் தலைமுறை வாக்காளர்கள் எதன் அடிப்படையில் தங்கள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரை தேர்வு செய்ய உள்ளார்கள்?

ரம்யா

திருச்சி விஷன் மாணவ பத்திரிக்கையாளர்

தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் களம் விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது. எங்கு திரும்பினாலும் பிரச்சாரங்கள் மூலம் மக்களிடம் வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கின்றன அரசியல் கட்சிகள்.   

முதல் தலைமுறை வாக்காளர்கள் எந்த விஷயங்களை முன்வைத்து தங்கள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரை தேர்வு செய்ய உள்ளார்கள் என்கிற தலைப்பில் திருச்சி மக்களை அணுகியது திருச்சி விஷன் குழு. அதில் நமக்கு கிடைத்த பதில்கள் சிலவற்றை பகிர்கிறோம். 

மனோ

கல்லூரி மாணவர்

குடும்பத்தில் என்ன‌ முடிவு எடுக்கிறார்களோ, அதுவே எனது முடிவும். பெற்றோர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை பார்த்து அவர்களையே நான் பின்பற்றுவேன்" என்று கூறியுள்ளார் முதல் முறை வாக்காளரான  மனோ. 

பிரியங்கா
கல்லூரி மாணவி


 "முதல் தலைமுறை வாக்காளராக இரண்டு விஷயங்களை முன்வைத்து இந்த தேர்தலில் எனது வாக்கை செலுத்தவுள்ளேன். முதலில் , இளம் தலைமுறை வேட்பாளருக்கு‌ முன்னுரிமை கொடுப்பேன். அது மட்டுமில்லாமல், வாக்குகளை பணம் கொடுத்து வாங்க முயற்சிக்காத வேட்பாளருக்கு வாக்கு செலுத்துவேன். இப்படி இந்த இரண்டு தகுதிகளையும் கொண்ட வேட்பாளர் எனது தொகுதியில் போட்டியிடவில்லை என்றால், நோட்டாவிற்கே எனது ஓட்டு" என்றார் பிரியங்கா.

நிர்மல்

கல்லூரி மாணவர்

இதில் அனுபவமும் அரசியல் குறித்த தெளிவான புரிதலும் அதிகம் உள்ள எனது பெற்றோர் எந்த வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்கிறார்களோ, அவருக்கே நான் வாக்கு செலுத்துவேன்" என்று கூறியுள்ளார் முதல் முறை வாக்காளரான  நிர்மல்.

கிஷோர்
கல்லூரி மாணவர்


கட்சி தலைவர்களை கருத்தில் கொண்டே எனது வாக்கு செலுத்த இருக்கிறேன். சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களது கட்சி தலைவர்களின் பொம்மைகளாகவே செயல்படுவார்கள்‌. அதனால் யார்‌ எனது தொகுதி வேட்பாளர் என்பதை பார்ப்பதைவிட கட்சி தலைவர்களின் செயல்பாடுகளை மனதில் வைத்து தான் வாக்கு செலுத்துவேன்" என்றார்‌ திருச்சியை சேர்ந்த கிஷோர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU