தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNUSRB) கடந்த ஆண்டு நடத்தப்பட்ட எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற போட்டியாளருக்கு அடுத்த கட்ட தேர்விற்கு, திருச்சி மாநகரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 800 பெண் போட்டியாளர்களுக்கு கடந்த (06.02.24)-ந் தேதி திருச்சி மாநகரம் கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் சான்றிதழ்கள் சரிபார்த்தல் (Certificate verification) உடல் அளவீட்டு சோதனை (Physical measurement test) சகிப்புதன்மை (Endurance test) மற்றும் உடற்தகுதி தேர்வுகள் (Physical efficiency test) ஆகிய முதற்கட்ட தேர்வுகள் நடைபெற்றது. இந்த தேர்வுகள் (06.02.2024)-ந் தேதி முதல் (10.02.2024)-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெற்று வருகிறது.

அதில் இன்று (08.02.2024)-ந் தேதி, கடந்த (06.02.24)ந் தேதி நடைபெற்ற முதற்கட்ட தேர்வுகளில் தகுதிபெற்ற 195 பெண் போட்டியாளருக்கு அழைப்பு கடிதம் கொடுக்கப்பட்டு, அதில் 191 நபர்கள் கலந்து கொண்டார்கள். இப்போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு உடற்தகுதி தேர்வுக்கான போட்டியில் 100 மீட்டர் அல்லது 200 மீட்டர் ஒட்டம், நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல், பந்து எறிதல் அல்லது குண்டு எறிதல் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது.

இன்று நடைபெற்ற உடற்தகுதி தேர்வுகள் (Physical efficiency test) தேர்வினை முன்னின்று நடத்தும் Super Check officer / மாநகர காவல் ஆணையர் ந.காமினி, நேரில் மேற்பார்வையிட்டு ஆய்வு செய்தும், பணியில் இருந்த காவல் அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.
 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           129
129                           
 
 
 
 
 
 
 
 

 08 February, 2024
 08 February, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments