Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

யானை தந்தத்தை கடத்தி விற்பனை செய்ய முயன்ற ஐந்து பேர் கைது

இன்று (11.4.2025)ஆம் தேதி காலை மத்திய வன உயிரின குற்ற கட்டுப்பாட்டு பிரிவுக்கு  திருச்சி நகரப் பகுதியில் யானை தந்தத்தை விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி தலைமை வனப் பாதுகாவலர்  ஏ. பெரியசாமி அவர்களின்

அறிவுரையின்படியும் திருச்சி மாவட்ட வன அலுவலர் திருமதி சி.கிருத்திகா அவர்களின் உத்தரவின்படியும் உதவி வனப் பாதுகாவலர் ஆர்.சரவணகுமார் அவர்களின் மேற்பார்வையில் திருச்சிராப்பள்ளி வனச்சரக அலுவலர் வி.பி சுப்பிரமணியம் அவர்களின் தலைமையில் தனிக்குழு உருவாக்கப்பட்டு வன உயிரின பொருட்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்வதை கண்டறிய

உருவாக்கப்பட்டு திருச்சி மாவட்டம் ராம்ஜி நகர் பகுதியில் திருச்சி- திண்டுக்கல் சாலையில் வாகன சோதையில் சோதனையில் ஈடுபட்டனர் அப்பொழுது சுமார் மதியம் 3.30 மணி அளவில் திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு நான்கு சக்கர வாகனமான Maruthi suzuki EECO (TN48BZ6779)

நிறுத்தி சோதனை செய்த போது வாகனத்தில் ஓட்டுநருடன் ஐந்து நபர்கள் இருந்தார்கள். அதிலிருந்து ஒருவர்  கைப்பையில் இரண்டு யானை தந்தங்கள் வைத்திருப்பது  கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரணையில் அவர்கள் யானை தந்தங்களை விற்பனைக்காக திருச்சிக்கு எடுத்து வந்தது தெரிந்தது.அதனால் அவர்கள் ஐந்து நபர்களையும் திருச்சிராப்பள்ளி வனச்சரக

அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டு விசாரணை செய்யப்பட்டதில் அவர்கள் கீழ்க்கண்ட நபர்கள் என தெரிய வந்தது ரங்கசாமி,திருப்பதி,ஞானசேகரன்,சுப்பிரமணி, கார்த்தி.1972 வன உயிரின பாதுகாப்புச் சட்டம் பிரிவு 44 இன் படி வனவிலங்கு பொருட்களை உரிய அனுமதி இல்லாமல் யானை தந்தம் வைத்திருந்தது விற்பனைக்கு தடை செய்யப்பட்டதை மீறி விற்பனைக்கு முயன்ற

குற்றம் இழைத்துள்ளனர்.  பிரிவு ஐம்பதின் படி கைது செய்யப்பட்டு பிரிவு 51 இன் படி தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். ஐந்து பேரையும்  குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *