திருவெறும்பூர்அருகே பணம் வைத்து வெட்டு சீட்டாட்டம் ஆடிய ஐந்து பேரை துவாக்குடி போலீசார் கைது-
திருவெறும்பூர் அருகே பொய்க்கைகுடி ஏரிக்கரை அருகே சிலர் பணம் வைத்து வெட்டு சீட்டு சூதாட்டம் விளையாடுவதாக துவாக்குடி எஸ்ஐ நாகராஜனிற்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அவரது தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
இதில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த காந்தர்வக்கோட்டை நடுத் தெருவைச் சேர்ந்த ஜெய்சங்கர் (42), புதுக்கோட்டை மாவட்டம் சவேரியார்ப்பட்டினம் வீராசாமி (48), பூதக்குடி சீனிவாசன் (50), பாளையப்பட்டி பிரகாஷ் (33), திருச்சி வரகனேரி நித்யானந்தபுரம் ஜவஹர் ஸ்ரீநாத் (27) ஆகிய 5 பேரையும்போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 52 சீட்டுக்களையும், ரூ. 20 ஆயிரம் ரொக்கம், 5 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
பணம் வைத்து வெட்டு சீட்டாட்டம் ஆடிய ஐந்து பேர் கைது

Comments