திருச்சி மாநகரம் அமர்வு நீதிமன்ற காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்கரை கீழப்புதூரில் வசித்து வரும் சந்திரசேகர் என்பவர் தனது சகோதரர் திரு.கோபிகண்ணன் (33) என்பவரை கடந்த 09.05.2021 அன்று மாலை 1900 மணியளவில் அடையாளம் தெரியாத 5 நபர்கள் ஹீபர் ரோட்டில் வழிமறித்து
அரிவாளால் வெட்டி கொலை செய்ததாக அமர்வு நீதிமன்ற காவல்நிலையத்திற்கு வந்து அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கினை கண்டோன்மெண்ட் காவல்நிலைய காவல் ஆய்வாளர் புலன் விசாரணை மேற்கொண்டதில், கொலை செய்யப்பட்ட கோபிகண்ணன் என்பவர் அரியமங்கலம் காவல் நிலைய குற்ற வழக்கில் ஹேமந்தகுமார் என்பவரை கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்ததாக காவல் துறையால் கைது
செய்யப்பட்டு நீதிமன்ற ஜாமினில் இருந்து வந்துள்ளார் என்பதும், கோபி கண்ணன் கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், மேற்படி அரியமங்கலம்
காவல் நிலைய குற்றவழக்கில் இறந்து போன ஹேமந்தகுமார் என்பரின் இளைய சகோதரரான பிரஜேஷ் பிரசாந்த், என்பவர் தனது நன்பர்களான சுரேஷ், நல்லதம்பி, அர்ஜீனன், உதயகுமார் ஆகிய 5
எதிரிகளையும் கடந்த 11.05.2021 அன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி எதிரிகளோடு கொலை குற்றத்தில் இளம் பிழையாளிகளான சித்திக் மற்றும் சஞ்சய் ஆகிய இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சிராப்பள்ளி இளைஞர் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர். மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கொடுங்குற்றம் செய்யக்கூடிய மனநிலையில் உள்ளவர்கள் என விசாரணையில் தெரிய வருவதாலும், மேற்படி 5 எதிரிகள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ள கண்டோண்மென்ட் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.
அதனை தொடர்ந்து, திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் பிரஜேஷ் பிரசாந்த், சுரேஷ், நல்லதம்பி ஆகிய மூன்று எதிரிகளுக்கும் 13.07.2021 அன்றும், அர்ஜீனன் மற்றும் உதயகுமார் ஆகிய இருவருக்கும் இன்று (14.07.2021) குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஆணை
சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
Comments