திருச்சி மாவட்டம், முசிறி அருகே காட்டுப்புத்தூர் பகுதியிலுள்ள மாமரத்துப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ பட்டாயி அம்மன், காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது, கோவிலுக்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர், இதில் நாமக்கல் மாவட்டம், செல்லப்பம்பட்டி கிராமம் காதம்பள்ளியை சேர்ந்த வெங்கடேசன் குடும்பத்துடன் மற்றும் உறவினர்களுடன் கும்பாபிஷேக விழாவிற்கு தனது ஒரே பெண் குழந்தை 5 வயது பைரவியுடன் வந்துள்ளார், பெண் குழந்தை சாலையோரம் சிறுநீர் கழிக்கும் பொழுது வழியாக மாணவ மாணவிகளுடன் ஏற்றி வந்த தனியார் பள்ளி வாகனம் பைரவி மீது மோதி தலை நசுங்கி நிகழ்விடத்தில் உயிரிழப்பு, வெங்கடேசன் திருமணமாகி பல ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்த ஒரே பெண் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது, விபத்து குறித்து தொட்டியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் காட்டுப்புத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
கும்பாபிஷேக விழாவிற்கு வந்த ஐந்து வயது பெண் குழந்தை தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments