திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 15 வயது மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை தூத்துக்குடி மாவட்டம் சின்னமணி நகரச் சேர்ந்த யோக பிரகாஷ் ஆமூர் மணப்பாளையம் காந்தி நகரில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு
வந்தபோது பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக செல்வி சுமதி ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில்
இன்று (19. 06.2025) திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் அவர்கள் யோக பிரகாஷ் என்பவருக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை மற்றும் மூவாயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த ஜுயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயசித்ரா மற்றும் நீதிமன்ற காவலர் பிரியங்கா ஆகிய இருவரையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments