பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும் 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா இன்று அதிகாலை கொடி ஏற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. கொடியேற்ற நிகழ்விற்காக அதிகாலை 2.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கொடியேற்றம் மண்டபம் வந்தடைந்தார். அங்கு நம்பெருமாள் கக்கு மங்கள ஆரத்தி எனப்படும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் கொடி படத்திற்கு பட்டர் சுவாமிகள் மற்றும் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்யப்பட்டு சரியாக 5.05 மணிக்கு மேளதாளம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது அங்கு இருந்த பக்தர்கள் ரெங்கா ரெங்கா என பக்தி பரவசத்துடன் வணங்கி வழிபட்டனர்.
இன்றைய தினம் முதல் அடுத்து வரும் 10 உற்சவ நாட்களுக்கு தினமும் காலை மற்றும் மாலை வேளையில் நம்பெருமாள் கற்பக விருட்ச வாகனம், சிம்ம வாகனம், கருட வாகனம், யானை வாகனம், தங்க குதிரை வாகனம் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகின்ற 29ஆம் அன்று நடைபெற இருக்கிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments