திருச்சி கே.கே.நகர் பூங்கா பின்புறம், மலதி மஹால் எதிரே உள்ள பகுதியில் மின்கம்பங்கள் முழுவதுமாக கொடிகள் மற்றும் செடிகள் சுற்றி வளர்ந்து, ஆபத்தான நிலையில் காணப்படுவது பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.
மின்கம்பங்கள், தெருவிளக்கு கம்பங்கள் மீது செடிகள் படர்ந்து, மின்வயர்கள் முழுவதும் மறைந்து காணப்படுவதால் மின்கசிவு, தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, கொடிகள் அகற்றப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments