தஞ்சையில் இருந்து பூனேவிற்கு சென்றுக்கொண்டிருந்த ஆக்சிஜன் கேரியர் கனரக வாகனம் நேற்று இரவு 11 மணிக்கு திருச்சி திருவானைக்காவல் தேசிய நெடுஞ்சாலையில் இயந்திர கோளாறு காரணமாக பழுதடைய சாலையிற் நடுவே நின்றுவிட்டது.
உடனடியாக அங்கு விரைந்து சென்ற டிவிஎஸ் நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப வல்லுனர்  சுயம்புவிடம் திருச்சி விஷன் கேட்டபோது
இரவு 11 மணிக்கு ஆக்சிஜன்  கேரியர்  கனரக வாகனம் திருவானைக்காவல் நெடுஞ்சாலையை கடந்து செல்லும் பொழுது வாகனத்தில் ஏற்பட்ட பேட்டரி கோளாறால் வாகனம் நின்றது.

தகவலை அடுத்து அங்கு சென்ற பொழுது ஏற்கனவே இது போன்ற அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கான அவசர உதவி எண் கொடுக்கப்பட்டுள்ளது .அதற்கான சர்வீஸ் மண்டி பணியாளர் பன்னீர் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து நாங்கள் அவ்விடத்திற்கு சென்று சேர்வதற்கு முன்பாகவே வாகனத்தை சரி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தார்.

  சர்வீஸ் மண்டி  என்பது    நெடுஞ்சாலைகளில் செல்லும் போது திடீரென வாகனங்களில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்வதற்காக உருவாக்கப்பட்டவை ஆகும்.வாகனத்தில் பேட்டரியில் தான் கோளாறு என்பதை கண்டறிந்து சுமார்  ஒரு மணி நேரத்துக்குள் சரிசெய்து வாகனம் அங்கிருந்து புறப்பட தயாரானது.
ஊரடங்கு அமலில்  உள்ளதால்  அதிகளவில் மக்கள் இல்லாமல் இருந்ததும், கனரக வாகனங்கள் மட்டும்தான் சென்று கொண்டிருந்தாலும் போக்குவரத்து நெரிசல் போன்ற எவ்வித இடர்பாடுகளும் ஏற்படுவதற்கு முன்பாகவே வாகனம் சரிசெய்யப்பட்டது.

இது போன்ற அவசர தேவைக்கான வாகனங்கள் எப்போதுமே எல்லாவற்றிலும் சரியாக இருக்கின்றனவா இயந்திர கோளாறு ஏற்படாத வண்ணம் உள்ளதா என்பதை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சோதனை செய்வார்கள்.ஆனால் எதிர்பாராதவிதமாக இது போன்ற கோளாறுகளும் ஏற்படுவதும் இயல்பானதுதான்.

 பேரிடர் காலங்களில் இரவு பகல் பாராது உழைக்க வேண்டும் என்பதே எங்களுக்கு கொடுக்கப்பட்ட மிக முக்கியமான கடமையாகும் அதை சரியான முறையில் செய்து முடித்த திருப்தியும் எங்களுக்கு உள்ளது என்றார் சுயம்பு .
பேரிடர் காலத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறைகளில் தங்களால் முடிந்த அளவுக்கு மக்களுக்கான சேவைகளை செய்து கொண்டிருக்கின்றனர்.அந்த வகையில் அவசர எண்ணைஅழைத்து உடனே உதாசீனப்படுத்தாமல் விரைந்து வந்து உதவிய பன்னீர்  அவர்களை அசோக் லேலண்ட் நிறுவனம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளது  குறிப்பிடத்தக்கது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           17
17                           
 
 
 
 
 
 
 
 

 30 April, 2021
 30 April, 2021





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments