திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு தொழில் புரிவோர் தங்களது நிறுவனங்களில் கடைகளில் உணவகங்களில் பேக்கரி மற்றும் இனிப்பு கடைகள், மளிகை கடைகள், சாலையோர உணவகங்கள் மற்றும் அனைத்து வகை உணவு தொழில் செய்பவர்கள் மற்றும் தங்களது நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் ஒரு தடுப்பூசி அவசியம் செலுத்தி கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இல்லையெனில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு படி உணவு வணிகங்கள் தற்காலிகமாக மூடப்படும். மேலும் தங்களது நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் எவருக்கேனும் கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையை அணுகி அதற்கான பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கொரோனாவில் இருந்து காத்துக்கொள்ள தடுப்பூசியை தலை சிறந்த ஆயுதம் ஆகும். எனவே மனிதர்கள் யாவரும் கொரோனா தடுப்பூசி இரண்டு தவணைகள் செலுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் உரிமையாளர்கள் தங்கள் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டு உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். தொடர்ந்து அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கண்டிப்பாக தங்களது நிறுவனங்கள் கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. கொரோனா வைரஸ் மூன்றாவது அலையை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உணவு வணிகர்கள் அனைவரும் முறையாக பின்பற்றி தடுப்பூசி செலுத்தி கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்ற ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn







Comments