Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

ஞாயிறு ஊரடங்கில் முன்கள பணியாளர்கள் மற்றும் பசியால் தவித்த 300 பேருக்கு உணவு – அசத்திய நண்பர்கள் குழு!!

No image available

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதோடு, அதிகரித்து வரும் நோய்த் தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள பல நடவடிக்கைகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது.

Advertisement

இருப்பினும், பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியினை கடைப்பிடிக்காத காரணத்தாலும், நாளுக்கு நாள் தொடர்ந்து நோய்த் தொற்று அதிகரித்து வருவதால், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுடன், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி முடிய இரவு நேர ஊரடங்கு 20.04.2021 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. 

Advertisement

இந்த நிலையில் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சாலையோரங்களில் வசிப்பவர்களின் நிலைமை நினைத்தால் கண்களில் கண்ணீர் மட்டும்தான் மிஞ்சும். ஒருவேளை சாப்பாட்டிற்காக ஏங்கும் எத்தனையோ பேர் இன்றளவும் இருந்து தான் வருகின்றனர். அதுவும் இதுபோல் ஊரடங்கு காலங்களில் உணவகங்கள் இல்லாததால் மிகவும் அவதிக்குள்ளாகி பசியால் வாடினர்.

இந்த நிலையில் தான் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக கனவு பாதைகள் நண்பர்கள் குழு சார்பாக திருச்சியில் முன்கள பணியாளர்கள் மற்றும் சாலையோர உணவில்லாமல் இருந்தோர் என 300க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இந்த கனவு பாதை நண்பர்கள் குழு சார்பாக சத்திரம் பேருந்து நிலையம், தில்லைநகர், மேலப்புதூர், பாலக்கரை, மத்திய பேருந்து நிலையம், ஜங்ஷன், கருமண்டபம், அரசு மருத்துவமனை ஆகிய பகுதிகளில் குழுவாக வண்டிகளில் பிரிந்து பசியால் இருந்தவர்களுக்கு உணவு அளித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர். 

Advertisement

மேலும் முன் களப்பணியாளர்களான காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்களுக்கும் தங்களால் இயன்ற உணவுகளை வழங்கினார். இதுகுறித்து ஒரு மாநகராட்சி ஊழியர் கூறுகையில்…. “காலை 6 மணிக்கு டூட்டிக்கு வந்துவிட்டோம். உணவகங்கள் அவ்வளவாக இல்லாததால் உணவுக்கு என்ன செய்வது என தடுமாறிய நிலையில், கடவுளாய் பார்த்து இவர்களை அனுப்பி உள்ளார்” என்று நெகிழ்ச்சி அடைந்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *