உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் குறும்படங்கள் மற்றும் பாடல்களை சமர்ப்பிக்க பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அழைப்பு விடுத்துள்ளது. போட்டியில் சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகள் நடுவர் குழுவால் மதிப்பாய்வு செய்யப்படும் சிறந்த படைப்புகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.
குறும்படங்கள் மூன்று முதல் ஐந்து நிமிடங்களும் விழிப்புணர்வு பாடல்கள் மொத்தம் மூன்று நிமிடங்களும் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பான உணவை கண்டறிவதன் முக்கியத்துவத்தை அறியவும் அவர்களின் உரிமைகள் பற்றி கற்பிக்கும் பொழுது படைப்புகள் பொது மக்களை ஊக்குவிக்க வேண்டும்.
படைப்புகளை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் மேலும் விவரங்களுக்கு 9585959595 என்ற எண்ணை அழைக்கலாம்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments