திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானங்களில் தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் சமீப காலாமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடு களில் இருந்து வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருகின்றனர்.
இதனை தடுக்கும் வகையில் சுங்கத்துறை அதிகாரிகளும், மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளும் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியாவிற்க்கு கொண்டு செல்லவிருந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான ஒரு பணியை சோதனை செய்த போது, அவரது உடல், கைபேசி, காலணியில் மறைத்து வைத்திருந்த சவூதி ரியால் 1,08,000 இந்தியா ரூபாயில் 23 லட்சத்து 11 ஆயிரம் மதிப்புள்ள கரன்சிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments