Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

வனத்துறையின் பிளாஸ்டிக் ஒழிப்பு முகாம்

தமிழ்நாடு வனத்துறை சார்பில் திருச்சி மாவட்டத்தில் திருச்சி வனச்சரகத்திற்குட்பட்ட மேலனைக்கட்டு காப்புக்காடு பகுதிகளிலும் துறையூர் வனச்சரகத்திற்குட்பட்ட குறிச்சிமலை காப்புக்காடு பகுதிகளிலும் மணப்பாறை சரகத்திற்குட்பட்ட பொய்கை மலை காப்புக்காடு பகுதிகளிலும் மற்றும் துவரங்குறிச்சி சரக்கத்திற்குட்பட்ட காயமலை காப்புக்காடு பகுதிகளிலும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றும் மாபெரும் முகாம் சனிக்கிழமை அன்று நடைபெற்றது. மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற இம்முகாம்களில் சமயபுரம் SRV பள்ளி, புத்தனம்பட்டி நேரு மெமோரியல் கல்லூரி, மணப்பாறை ஸ்ரீ குரு CBSE பள்ளி மற்றும் துவரங்குறிச்சி Watching ஆண்டனிஸ் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பங்குபெற்றனர். மேலும் இம் முகாமில் திருச்சியை சேர்ந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்களான மண்ணும் மரமும் நியூ டிரஸ்ட் நியூ திங்கிங், மணப்பாறையை சேர்ந்த விடிவெள்ளி, கரடிப்பட்டி நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அடுக்குமல்லி மகளிர் சுய உதவி குழு போன்ற அமைப்புகளில் இருந்து தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இவர்களுடன் ஸ்ரீரங்கம் தாலுகா உட்பட்ட மேலூர், அணைக்கரை, பாலூர், மணப்பாறை தாலுகா உட்பட்ட பொய்கைப்பட்டி துறையூர் தாலுகாக்கு உட்பட்ட நாகலாபுரம், மருங்காபுரி தாலுகா உட்பட்ட கரடிபட்டி போன்ற கிராமங்களில் இருந்து துப்புரவு பணியாளர்களும் கலந்து கொண்டு பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினர். இம்முகாமில் 53 எண்ணிக்கையிலான வனத்துறை பணியாளர்கள், 222 எண்ணிக்கையிலான மாணவர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டு 467 கிலோ பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி உள்ளனர். முகாமில் அகற்றப்பட்ட குப்பைகள் அனைத்தும் உரிய முறையில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அப்புறப்படுத்தப்பட்டன. மாவட்ட வன அலுவலர் கிருத்திகா IFS அவர்கள் கூறுகையில் இயற்கை சூழலுக்கும், வன விலங்குகளுக்கும் பிளாஸ்டிக் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் இதனை மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இவ்வாறான முகாம்கள் நடத்தப்படுவதாக தெரிவித்தார். மேலும் பிளாஸ்டிக் குப்பைகளை ஒழிப்பதற்கு தமிழ் நாடு அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பதுடன் இயற்கைக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோக படுத்துவதை நிறுத்துவதிலும் பிளாஸ்டிக் கழிவுகளை உரிய முறையில் அப்புறப்படுத்துவதிலும் சமூக அக்கறையுடம் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் இம்மு முகாமில் பங்கு பெற்று பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றிய வனப்பணியாளர்கள் மாணவர்கள், தன்னார்வலர்கள், துப்புரவு பணியாளர்கள், பொதுமக்கள், அனைவருக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *