திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவிலான தடகளப் போட்டிகள் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு பல தரப்பினரிடம் இருந்து ஸ்பான்சர் ஷிப் பெற்று போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் படம் கொண்ட பிளக்ஸ் போர்டுகள் அண்ணா விளையாட்டு அரங்கு ரேஸ் கோர்ஸ் சாலையில் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது. தகவல் அறிந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, திருச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரிகளிடம் கடிந்து கொண்டதாக கூறப்படுகிறது.

பின்னர் உடனடியாக அந்த பிளக்ஸ் போர்டுகள் அகற்றப்பட்டன. சில இடங்களில் சாலையில் தலைக்குப்புற கவிழ்த்து வைக்கப்பட்டன. பிளக்ஸ் போர்டுகள் சில இடங்களில் ஒழித்தும் வைக்கப்பட்டது. பின்னர் போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று மாலை போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிக்க முன்னாள் காவல்துறை அதிகாரி தேவாரம் வருகிறார்.

திமுக ஆட்சி காலத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் பிளக்ஸ் போர்டு வைத்து விவகாரம் திருச்சி மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக திமுக அமைச்சர்கள் யாருடைய ப்ளக்ஸ் போடும் இல்லாமல் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ப்ளக்ஸ் போர்டு வைத்தது யார் என திமுகவினர் விசாரித்து வருகின்றனர். தலைக்குப்பரற கிடந்த போர்டுகளை மீண்டும் எடுத்து வைத்து கட்டி வைக்கப்பட்ட நிகழ்வுகளும் அரங்கேறியது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

 
 
 31 Oct, 2025
31 Oct, 2025                           6
6                           
 
 
 
 
 
 
 
 

 08 June, 2024
 08 June, 2024





 




 
             
             
             
             
             
             
             
             
             
            









Comments