பெரியார் பெருந்தொண்டர் சி.மருதை மறைவு அரசு மருத்துவமனைக்கு உடல் தானம் திருச்சி, டிச.23 திருச்சி சுப்ரமணியபுரம், ஹைவேஸ் காலனியில் வசித்து வந்த சி.மருதை நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தீவிர பெரியார் பற்றாளரான இவர் திருச்சி திராவிடர் கழகத்தின் முன்னாள் மாநகர தலைவராக செயலாற்றினார்.
மேலும் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். அவர் இன்று (23.12.2025) அதிகாலை உடல் நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார். மறைந்த சி.மருதை உடலுக்கு திராவிடர் கழகத்தினர், தி.மு.க.வினர், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் மாலை 3:00 மணிக்கு அவரது இல்லத்தில் இறுதி மரியாதை செலுத்திய பிறகு அவரது விருப்பத்தின் பேரில் அவரது உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்படுகிறது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments